இந்தியாவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக திகழ்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்
#CaptainNews | #TamilNews #PM_Modi #Xi_Jinping
இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்துள்ள பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நேற்று பார்வையிட்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையே அலுவல்சாரா பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு விருந்துக்குப் பின் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கிய சீன அதிபர், இன்று காலை கார் மூலம் கோவளம் சென்று பிரதமர் மோடியை மீண்டும் சந்தித்தார். அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். பின்னர் பேட்டரி காரில் பேசியபடி பயணித்த அவர்கள் கடற்கரை அருகே உள்ள கண்ணாடி மாளிகைக்கு சென்றனர். அங்கு இரு தலைவர்களும் தனிபாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தலைவர்களும் கண்ணாடி மாளிகையின் வெளிப்புறத்திலும், அதனைத் தொடர்ந்து கோவளம் கடற்கரையின் அழகை ரசித்தபடியேவும் கலந்துரையாடினர். மொத்தமாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நீடித்து நிறைவடைந்தது.
இதையடுத்து இரு நாடுகளின் அதிகார மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உரையாற்றிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்பதாக தமிழில் பேச்சைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளாக இந்தியாவும் சீனாவும் திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியா- சீனா இடையிலான உறவு எப்போதும் நிலைத்த தன்மையுடன் வளர்ந்து வருவதாக கூறிய அவர், இது எப்போதும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே வணிகம் மற்றும் கலாச்சார உறவு இருந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையே எந்த இடையூறையும் ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவின் விருந்தோம்பலும், உற்சாக வரவேற்பும் சிறப்பாக இருந்தது என்றார். பிரதமர் மோடியும் தானும் நெருங்கிய நண்பன் போன்று பழகியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியுடன் இதயபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய ஜி ஜின் பிங், இரு நாடுகள் இடையே புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளதாக கூறிய பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காணப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக வருகை மற்றும் உபசரிப்பு ஆகியவை தனக்கும் தனது குழுவிற்கும் புதிய அனுபவத்தை தந்துள்ளதாகவும் ஜி ஜின் பிங் குறிப்பிட்டார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

இந்தியாவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக திகழ்கிறது - பிரதமர் மோடி பெருமிதம் live tamil news 7 tv channels | |
2 Likes | 2 Dislikes |
33 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 12 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét