மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ராகுல்காந்தி ஆய்வு
#ராகுல்காந்தி #CaptainNews | #TamilNews
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் இன்று இரண்டாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆய்வு செய்கிறார்.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியான 18 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனையடுத்து பெரும்பாலான இடங்களில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயநாடு, மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரளா முழுவதும் 1,621 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 74 ஆயிரத்து 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளனர். கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் நிலம்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். மேலும், வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ராகுல் காந்தி ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று தனது தொகுதியான வயநாட்டிற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ராகுல்காந்தி ஆய்வு camera iphone 8 plus apk | |
3 Likes | 3 Dislikes |
75 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 11 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét