நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
#ராஜீவ்_காந்தி #CaptainNews | #TamilNews
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோலை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையில் சுமார் 28 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
தனது மகள் திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த மாதம் 5-ம் தேதி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து சிறை நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் அவர் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
வரும் 25-ம் தேதியுடன் பரோல் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அவரது பரோலை 3 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு rahul gandhi family | |
2 Likes | 2 Dislikes |
116 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 22 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét