திருச்சி நகைக்கடை கொள்ளையில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
#CaptainNews |
#TamilNews |
#திருச்சி |
#நகைக்கடை |
#லலிதா_ஜுவல்லரி
திருச்சி நகைக்கடை கொள்ளையில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை சுவரில் துளையிட்ட முகமூடி அணிந்த நபர்கள் அங்கிருந்த 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திருவாரூரில் காவல்துறையின் வாகன சோதனையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் என்பவர் பிடிபட சுரேஷ் என்பவர் தப்பி விட்டார். மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து மணிகண்டன் மற்றும் தப்பயோடிய சுரேஷின் தாயார் கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பிரபல கொள்ளையனான திருவாரூர் முருகனின் திட்டமிடலின் பேரில்தான் இந்த கொள்ளை நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தப்பியோடிய சுரேஷ், நேற்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட முருகன், பெங்களூருவில் உள்ள 11வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை காவலில் எடுத்து தமிழகம் கொண்டு வர தனிப்படை விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. முருகனிடம் நடத்தப்படும் விசாரணையில்தான் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் அவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

திருச்சி நகைக்கடை கொள்ளையில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். live tamil news 7 tv channels | |
5 Likes | 5 Dislikes |
144 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 11 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét